இது என் உண்மைமுகம் கிடையாது? சிதைந்த முகத்தை பிளாஸ்டிக் சர்ஜெரி செய்த குக்வித் கோமாளி பவித்ரா!
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பல பிரபலங்கள் பிரபலமாவதை போன்று பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகல் தான் அதற்கு முதற்கட்ட பாலாமாக அமைந்து வருகிறது. அப்படி சூப்பர்சிங்கர், கலக்கபோவது யாரு, ஜோடி நம்பர் ஒன், பிக்பாஸ் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் மூலம் சினிமாவில் பிரபலங்களாக கொடிக்கட்டி வருகிறார்கள்.
அந்தவகையில் அதே தொலைக்காட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிப்பரபாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பெரியளவில் பிரபலமாகி மக்களின் நல் ஆதரவை பெற்றது குக்வித் கோமாளி நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சி மூலம் பெரிய இடத்தினை பிடித்தவர் நடிகை பவித்ரா லட்சுமி.
குறும்படங்கள் யூடியூப் நடனங்கள் என பிரபலமாகி பின் இந்நிகழ்ச்சி மூலம் தற்போது இரு படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்நிலையில், நீங்கள் பார்க்கும் என் முகம் உண்மையான முகம் கிடையாது என்று கூறியுள்ளார்.
விபத்து ஒன்றில் சிக்கி என் முகம் வேறுமாதிரியாக இருந்தது. இதையடுத்து பிளாஸ்டிக் சர்ஜெரி செய்து கொண்டேன். என் நண்பர்கள் உதவியுடன் இதை நான் செய்தேன். இதை கேள்விபட்ட ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்தும் வருகிறார்கள்.