ஓடிடியில் ரிலீஸாகும் விஷ்ணுவிஷாலின் அடுத்த படம்!

ஓடிடியில் ரிலீஸாகும் விஷ்ணுவிஷாலின் அடுத்த படம்!

தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் சமீபத்தில் பேட்மின்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா என்பவரை திருமணம் செய்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அவர் நடித்த படம் ஒன்று நீண்ட நாட்களாக ரிலீஸ் ஆகாமல் இருக்கும் நிலையில் தற்போது ஓடிடியில் வெளிவர இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

விஷ்ணு விஷால் நடிப்பில் மனுஆனந்த் இயக்கத்தில் உருவான திரைப்படம் FIR. இந்த படத்தில் விஷ்ணு விஷால் ஜோடியாக மஞ்சிமா மோகனும் மேலும் முக்கிய வேடங்களில் கௌதம் மேனன், கௌரவ் நாராயணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அஸ்வத் இசையமைத்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்த நிலையில் திரையரங்கில் ரிலீஸ் ஆவதற்காக காத்திருந்தது. ஆனால் இப்போதைக்கு திரையரங்குகள் திறக்கும் வாய்ப்பு இல்லை என்பதை அடுத்து தற்போது ஒரு முன்னணி ஓடிடியில் இந்த படம் வெளியாக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது

அப்துல்லா என்ற முஸ்லிம் இளைஞர் கேரக்டரில் விஷ்ணுவிஷால் நடித்துள்ளார். இவர் போலீசாரால் தேடப்படும் ஒரு இளைஞராகவும், அவரை தேடும் போலீஸ் அதிகாரியாக கவுதம் மேனனும் நடித்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வின்சென்ட் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு பிரசன்னா எடிட்டிங் செய்துள்ளார் என்பதும் இந்த படத்தை விஷ்ணு விஷால் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News