'மாஸ்டர்' தயாரிப்பாளரின் அடுத்த படத்தின் இசையமைப்பாளர் இவரா?
தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ அடுத்ததாக தனது மருமகனும் அதர்வா முரளியின் சகோதரருமான ஆகாஷ் முரளி நடிக்கும் திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்தது. இந்த படத்தை அஜித் நடித்த ’பில்லா’ ’ஆரம்பம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டிருந்தாலும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தெரிகிறது. குறிப்பாக இந்த படத்தின் இசையமைப்பாளர் தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஜிப்ரான் தான் இந்த படத்தின் இசையமைப்பாளர் என்றும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
மேலும் ஆகாஷ் முரளி ஜோடியாக நடிக்கும் நடிகை உள்பட மற்ற நட்சத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படம் குறித்த ஒரு விரிவான தகவல் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.