விஜய் தொலைக்காட்சியில் நிறுத்தப்பட்ட இரண்டு ஹிட் சீரியல்கள்

விஜய் தொலைக்காட்சியில் நிறுத்தப்பட்ட இரண்டு ஹிட் சீரியல்கள்

கொரோனா தாக்கம் தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளார்கள். 

அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல விஷயங்களை செய்து வருகிறார்கள்.

தற்போது கொரோனா தொற்றில் இருந்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சென்னையில் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் திருச்சி, கோயம்புத்தூர் போன்ற இடங்களில் அதிகமாகி வருகிறது. கொரோனா காரணமாக அரசு முழு ஊரடங்கு உத்தரவிட்டனர். இதனால் சீரியல் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது.

விஜய் தொலைக்காட்சியில் ஏற்கெனவே சில சீரியல்கள் நிறுத்தப்பட்ட நிலையில் வரும் திங்கட்கிழமையில் இருந்து பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 சீரியலும் நிறுத்தப்படுகிறதாம்.

அந்த சீரியல் நேரத்தில் பாரதி கண்ணம்மா-ராஜா ராணி 2 மெகா சங்கமம் மறு ஒளிபரப்பு செய்யப்படலாம் என்கின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES