ஷங்கர்-விஜய் புதிய பட கூட்டணி நடக்காமல் போனதற்கு இதுதான் காரணமா?- வெளிவந்த விவரம்

ஷங்கர்-விஜய் புதிய பட கூட்டணி நடக்காமல் போனதற்கு இதுதான் காரணமா?- வெளிவந்த விவரம்

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர், தளபதி விஜய்யை வைத்து நண்பன் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

முதல்வன் படத்திலேயே விஜய்யை வைத்து இயக்க முயற்சி செய்துள்ளார் அப்போது அது நடக்கவில்லை. ரசிகர்கள் மீண்டும் ஷங்கர் மற்றும் விஜய் இணைய வேண்டும் என ஆசைப்பட்டார்கள்.

அதன்படி அண்மையில் ஷங்கர், விஜய்யிடம் ஒரு கதை கூற தளபதியும் க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளார். அடுத்து தயாரிப்பாளர் தேடல் படத்திற்காக நடக்க அனைவரும் தற்போது உள்ள சூழலில் இருவரும் இணையும் படம் தயாரிப்பது கஷ்டம்.

ஷங்கர்-விஜய் இருவரின் சம்பளமே ரூ. 150 கோடி வந்துவிடும், அதற்கு மேல் படத்தின் பட்ஜெட் அதிகமாக இருக்கும். இப்போது உள்ள சூழலில் அவ்வளவு பெரிய பட்ஜெட்டில் படம் இயக்குவது சரியாக இருக்காது என சிலர் பின்வாங்கியுள்ளனர்.

இப்போது இல்லை ஆனால் வருங்காலத்தில் ஷங்கர்-விஜய் கூட்டணியில் படம் கண்டிப்பாக வரும் என கூறுகின்றனர். 

விஜய் 65வது படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டார், கொரோனா தாக்கம் காரணமாக இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஷங்கர் தெலுங்கில் ராம் சரண் படம், ஹிந்தியில் ரன்வீர் சிங்குடன் ஒரு படம் என அடுத்தடுத்து கமிட்டாகி வருகிறார்.

LATEST News

Trending News