பாலியல் புகார் சுமத்தப்பட்டவருக்கு விருதா... வைரமுத்துக்கு எதிராக பிரபல நடிகை

பாலியல் புகார் சுமத்தப்பட்டவருக்கு விருதா... வைரமுத்துக்கு எதிராக பிரபல நடிகை

கவிஞராகவும், பாடலாசிரியராகவும் இருக்கும் வைரமுத்துக்கு ஓ.என்.வி விருது வழங்க பட்டத்துக்கு பிரபல நடிகை எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.

மலையாள பெரும் கவிஞர்களுள் ஒருவர் ஓ.என்.வி குறுப். ஞானபீட விருது பெற்றவர். அவர் பெயரால் 2017-ம் ஆண்டு நிறுவப்பட்டது ஓ.என்.வி. இலக்கிய விருது. இதுவரை மூத்த மலையாளப் படைப்பாளர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு கவிஞர் வைரமுத்து, இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

முதல் முறையாக மலையாளி அல்லாத ஒரு இலக்கியவாதிக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில் வைரமுத்து இந்த விருது வழங்கப்பட்டதுக்கு தமிழில் பூ, மரியான் படங்களில் நடித்த மலையாள நடிகை பார்வதி எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.

வைரமுத்து - பார்வதிஓஎன்வி சார் நமது பெருமை, ஒரு கவிஞராகவும், பாடலாசிரியராகவும் அவரது பங்களிப்பு ஈடு இணையற்றது. பாலியல் புகார்கள் பல சுமத்தப்பட்டிருக்கும் ஒருவருக்கு அவர் பெயரில் விருது வழங்குவது பெரும் அவமரியாதை என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார் பார்வதி.

LATEST News

Trending News

HOT GALLERIES