சூர்யா-விஜய்சேதுபதி ரசிகர்களுக்கு செம குஷியான தகவல்!

சூர்யா-விஜய்சேதுபதி ரசிகர்களுக்கு செம குஷியான தகவல்!

சூர்யா, விஜய் சேதுபதி உள்பட பலர் நடித்த ஆந்தாலஜி திரைப்படமான ’நவரசா’ ரிலீஸ் தேதி குறித்த தகவல் கசிந்துள்ளதை அடுத்து சூர்யா, விஜய் சேதுபதி ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.

மணி ரத்னம் தயாரிப்பில் 9 தனித்தனி கதைகள் கொண்ட ஆந்தாலஜி திரைப்படம் ’நவரசா’. இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

சூர்யா, விஜய்சேதுபதி, சித்தார்த், அரவிந்த் சாமி, பாபி சிம்ஹா, பிரகாஷ் ராஜ், கெளதம் கார்த்திக், அசோக் செல்வன், விக்ராந்த், ரோபோ சங்கர் மற்றும் நித்யா மேனன், பார்வதி, அம்மு அபிராமி, பூர்ணா, ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்விகா உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பில் அரவிந்த் சாமி, பிஜோய் நம்பியார், கெளதம் மேனன், ஹலிதா ஷமீம், கார்த்திக் சுப்புராஜ், பொன்ராம் மற்றும் ரதீந்திரன் ஆர். பிரசாத் உள்ளிட்ட 9 இயக்குநர்கள் இயக்கியுள்ள 9 எபிசோடுகள் தான் ’நவரசா’ எனும் ஆந்தாலஜி வெப்தொடர்.

இந்த தொடரின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும், வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் நெட்பிளிக்ஸில் நவரசா ஆந்தாலஜி வெளியாகும் என தகவல்கள் கசிந்துள்ளன.

LATEST News

Trending News