பள்ளிபருவத்தில் எனக்கு இந்த கொடுமை நடந்தது? உண்மையை கூறிய விஜய்பட நடிகை..

பள்ளிபருவத்தில் எனக்கு இந்த கொடுமை நடந்தது? உண்மையை கூறிய விஜய்பட நடிகை..

சென்னை PSBB தனியார் பள்ளியில் மாணவிகளை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தியதாக ராஜகோபலன் என்ற ஆசிரியர் மீது பல மாணவிகள் புகாரளித்தனர். இந்த செய்தி வெளியாகி பலரி கண்டனங்களையும் மாணவிகளுக்கு ஆறுதலாக பிரபலங்கள் அரசியல் பிரமுகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

அதேசமயம் ஏதாவது தனக்கு நடந்தால் அதை வெளியே கூறுங்கள் என்று கூறி வருகிறார்கள். அந்தவகையில், நடிகர் விஜய்சேதுபதி, திரிஷா நடித்த 96 படத்தில் பள்ளி பருவ நடிகையாக அறிமுகமானவர் கெளரி கிஷன். இதையடுத்து மாஸ்டர், கர்ணன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது தன் பள்ளி பருவத்தில் தன்னக்கு நடந்த கசப்பான தருணங்களை கூறி அதிர்ச்சியளித்துள்ளார்.

பள்ளியில் படித்தபோது, ஆசிரியர்கள் சிலர், மாணவமாணவிகளை அசிங்கமாக பேசுவதும், நடத்துவதுமாக இருந்தார்கள். உடல் அமைப்பை கிண்டல் செய்வது, மிரட்டுவது, கேரக்டரை கேவலப்படுத்தி பேசுவது, ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்களை திணிப்பது போன்ற செயல்களில் மாணவ-மாணவிகள் மீது சுமத்துவது என்று பல கொடுமைகளை செய்து வந்தனர்.

நான் அனுபவித்ததை என்னுடன் படித்தவர்களும் எதிர்கொண்டதாக என்னிடம் கூறியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். மேலும், இதுபோன்று உங்களுக்கு நடந்தால் தயங்காமல் வெளிப்படுத்துங்கள். உங்களின் பெயர் வெளிவராமல் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் கெளரி கிஷன்.

LATEST News

Trending News