மிகவும் விரும்பத்தக்க பெண்கள் பட்டியல்: இந்த நடிகை தான் முதலிடமா? ரசிகர்களின் கனவுக்கன்னி
2020ம் ஆண்டுக்கான மிகவும் விரும்பத்தக்க பெண்களின் பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார் ரம்யா பாண்டியன்.
சின்னத்திரைக்கான 2020ம் ஆண்டு மிகவும் விரும்பத்தக்க பெண்களின் பட்டியலை Times Of India வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் ரம்யா பாண்டியன், ஒரே ஒரு போட்டோஷீட் மூலம் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம்வந்தவர் ரம்யா பாண்டியன்.
ஜோக்கர், டம்மி டப்பாசு, ஆண் தேவதை படங்களில் நடித்துள்ள ரம்யாவுக்கு, குக் வித் கோமாளி ஷோ உலகெங்கும் ரசிகர்களை தேடித்தந்தது.
தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அசத்தினார், தற்போது மிகவும் விரும்பத்தக்க பெண்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
இதனையடுத்து #RamyaPandian என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.