விஷாலின் அடுத்த படத்தின் நாயகியா? ரசிகரின் கேள்விக்கு ப்ரியா பவானிசங்கர் அளித்த பதில்!

விஷாலின் அடுத்த படத்தின் நாயகியா? ரசிகரின் கேள்விக்கு ப்ரியா பவானிசங்கர் அளித்த பதில்!

விஷாலின் அடுத்த படத்தில் நாயகி நீங்களா? என ப்ரியா பவானி சங்கரிடம் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் தனது டுவிட்டரில் பதில் அளித்துள்ளார். நடிகை ப்ரியா பவானி சங்கர் தற்போது ’இந்தியன் 2’, ‘களத்தில் சந்திப்போம்’, ‘ஓ மணப்பெண்ணே’, ‘பொம்மை’, ‘ஹாஸ்டல்’, ‘ருத்ரன்’, ‘பத்து தல’ உள்பட சுமார் பத்து படங்களில் நடித்து வருகிறார் என்பதும், கோலிவுட்டில் மிகவும் பிஸியான நடிகையாக அவர் உள்ளார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் விஷால் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான ’விஷால் 32’ திரைப்படத்தை ’அடங்கமறு’ இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து ரசிகர் ஒருவர் டுவிட்டர் பக்கத்தில் ப்ரியா பவானி சங்கரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ப்ரியா பவானி சங்கர் ’இப்போதைக்கு நானும் விஷாலும் இயக்குனர் கார்த்திக்கும் எங்களுடைய அன்புக்குரியவர்களை பாதுகாக்கும் முயற்சியில் உள்ளோம். உங்களது அன்புக்குரியவர்களையும் பாதுகாப்போம். நிலைமை அனைத்தும் சரியானதும் இது குறித்த முறையான அறிவிப்பு வெளியாகும்’ என்று பதில் கூறியுள்ளார். இதனை அடுத்து விஷால் படத்தில் அவர் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

LATEST News

Trending News