நயன்தாராவை அடுத்து கீர்த்தி சுரேஷ்: வைரலாகும் புகைப்படம்!

நயன்தாராவை அடுத்து கீர்த்தி சுரேஷ்: வைரலாகும் புகைப்படம்!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவை அடுத்து தற்போது தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் தடுப்பூசி போட்டுக் கொண்டதன் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவன் உடன் சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டார். ஆனால் அவர் தடுப்பூசி போட்டுக்கொண்டது குறித்து சில சர்ச்சைகள் ஏற்பட்டதை அடுத்து அவர் மீண்டும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்த நிலையில் நயன்தாராவை அடுத்து தற்போது கீர்த்தி சுரேஷும் தடுப்பூசி போட்டுக் கொண்டதன் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திலும் ஊசி தெரியவில்லை என்றாலும் கீர்த்தி சுரேஷ் தடுப்பூசி போட்டுக் கொண்டது குறித்த எந்த சர்ச்சையும் எழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News