ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த தனுஷ் பாடல்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷின் புதிய பாடல் ஒன்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'ஜகமே தந்திரம்'. இந்த படத்தில் ஐஷ்வர்யா லட்சுமி, ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் ரகிட ரகிட மற்றும் புஜ்ஜி ஆகிய பாடல்கள் வெளியாகி மக்களிடம் வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில், நடிகர் தனுஷ் எழுதி பாடியுள்ள "நேத்து" என்ற பாடல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
தனுஷ் - ஐஸ்வர்யா லட்சுமி
பாடல் வெளியாகி 7 மணி நேரத்திலேயே 10 லட்சத்துக்கும் மேலான பார்வையாளர்களை பெற்றுள்ளது. மேலும் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.