பீர் பாட்டிலால் மாடல் அழகியின் மண்டையை தாக்கிய நடிகை! மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சஞ்சனா..

பீர் பாட்டிலால் மாடல் அழகியின் மண்டையை தாக்கிய நடிகை! மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சஞ்சனா..

தமிழ் சினிமாவில் ஒரு காதல் செய்வீர் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சஞ்சனா கல்ராணி. மாடலிங் படித்த பின் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல படங்களில் நடித்து வரும் சஞ்சனா நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரியுமாவார். சமீபத்தில் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் போதை பொருள் சம்பந்தப்பட்ட வழக்கில் சிக்கி ஜெயிலுக்கு சென்றார்.

சில மாதங்களுக்கு முன் ஜாமினில் வெளியே வந்து படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அந்த வழக்கு முடிந்த நிலையில், 2019ல் மாடல் அழகி வந்தனா ஜெயின் என்பவரை பீர் பாட்டிலால் தலையில் தாக்கியுள்ளார். இதுதொடர்பாக, சஞ்சனா கல்ராணி மீது வந்தனா ஜெயின் பீர் பாட்டிலை வீசி உடல்ரீதியாக தாக்கி என்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக போலிசில் புகாரளித்தார்.
 
இதையடுத்து, வந்தனா ஜெயினின் பார்வை பாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டதால் கப்பன் பார்க் போலிசில் புகாரளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்கள்.

இதையடுத்து வந்தனா கோர்ட்டில் மனு தாக்கல் செய்ததை அடுத்து, விசாரனை மனுவை ஏற்ற நீதிமன்ற தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலிசாருக்கு உத்தரவிட்டது. இதனால் சஞ்சனா கல்ராணி மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES