தனுஷின் ‘கர்ணன்’ படம் பார்த்து வியந்து பாராட்டிய பிரபல பாலிவுட் இயக்குனர்

தனுஷின் ‘கர்ணன்’ படம் பார்த்து வியந்து பாராட்டிய பிரபல பாலிவுட் இயக்குனர்

தனுஷ் நடித்துள்ள ‘கர்ணன்’ படத்தை ஓடிடியில் பார்த்த பிரபல பாலிவுட் இயக்குனர், தனுஷையும், படக்குழுவினரையும் வெகுவாக பாராட்டி உள்ளார்.

தமிழில் முன்னணி நடிகராக வலம்வரும் தனுஷ், ஆனந்த் எல் ராய் இயக்கிய ‘ராஞ்சனா’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். தற்போது ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் மேலும் ஒரு இந்தி படத்தில் நடித்து முடித்துள்ளார். ‘அத்ரங்கி ரே’ என பெயரிடப்பட்டுள்ள இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

இந்நிலையில் தனுஷ் நடித்துள்ள ‘கர்ணன்’ படத்தை ஓடிடியில் பார்த்த இயக்குனர் ஆனந்த் எல் ராய், தனுஷையும் படக்குழுவினரையும் வெகுவாக பாராட்டி உள்ளார். 

ஆனந்த் எல் ராயின் டுவிட்டர் பதிவு

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது: “அற்புதம், புத்திசாலித்தனம்... இப்படித்தான் கர்ணன் படத்தின் அனுபவத்தை என்னால் விவரிக்க முடியும். மாரி செல்வராஜ், என்ன ஒரு அற்புதமாக கதையை சொல்லியிருக்கிறார். உங்கள் எண்ணங்களை செல்லுலாய்டில் அழகாக வர்ணம் பூசி இருக்கிறீர்கள். தனுஷ், நீ ஒரு நடிகன் என நான் நினைத்தேன், ஆனால் நீ ஒரு மந்திரவாதி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

LATEST News

Trending News