சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி
பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி, தற்போது சமையல் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க உள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர், தற்போது சமையல் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க உள்ளார்.
உலகம் முழுவதும் பிரபலமான ‘மாஸ்டர் செஃப்’ என்ற சமையல் நிகழ்ச்சி தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்கிறார்கள். அந்த நிகழ்ச்சியை தான் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருக்கிறார். ‘மாஸ்டர் செஃப் இந்தியா - தமிழ்’ என்ற பெயரில் இந்நிகழ்ச்சி தயாராகியுள்ளது.
உலகளவில் பிரபலமான இந்நிகழ்ச்சியை தமிழில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளதால், இதன் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. ஏற்கனவே ரசிகர்களிடம் பிரபலமான குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியாக இந்நிகழ்ச்சி அமையுமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.