டாக்டர் படத்தின் புதிய அப்டேட் - அதிகாரப்பூர்வமான அறிவிப்பு
சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர்.
இபபடத்தில் சிவர்த்திகேயனுடன் இணைந்து பிரியங்கா அருள் மோகன், அர்ச்சனா, தீபா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கொரோனா இரண்டாவது அலை காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது.
மற்றொரு புறம் இப்படம் ஓடிடி யில் வெளியாக பெரிதும் வாய்ப்புகள் இருக்கிறது என தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் டாக்டர் படத்தின் சென்சார் சான்றிதழ் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.
இதில் டாக்டர் திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் ரன் டைம் 148 நிமிடங்கள் என்று தெரிவித்துள்ளனர்.