"உயிருக்கு போராடுறாங்களாம்ல".. கலாய்த்த 'சுந்தரி' கேப்ரியல்லா.. இப்போ எப்படி இருக்கார்?

"உயிருக்கு போராடுறாங்களாம்ல".. கலாய்த்த 'சுந்தரி' கேப்ரியல்லா.. இப்போ எப்படி இருக்கார்?

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தற்போது தாக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் திரைப்பிரபலங்கள் பலரும் தொடர்ச்சியாக தங்களுக்கு கொரோனா வந்ததாகவும் அதில் இருந்து மீண்டுவிட்டதாகவும் எனவே மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியலின் நாயகி சுந்தரிக்கு கொரோனாவா? உயிருக்கு போராடுறாங்களா? என்கிற ரீதியில் வெளியான அதிரிபுதிரி வதந்திகளை தனக்கே உரிய பாணியில் சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லா மறுத்துள்ளார்.

இதுபற்றி விளக்கம் அளித்துள்ள 'சுந்தரி' கேப்ரியல்லா, “நான் நல்லா தான் இருக்கேன்.. டைட்டில பாரு.. உயிருக்கு போராடுறாங்களாம்.. நாம் நலமாக இருக்கேன். உடம்பு சரி ஆகிட்டு இருக்கு!” தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.  ரசிகர்கள் பலரும் தேறி வாருங்கள் என கமெண்டுகளை பதிவிட்டுள்ளனர்.

முன்னதாக சுந்தரி கேப்ரியல்லா, ‘ரஹ்மானின்’ மூப்பில்லா தமிழே தாயே பாடலில் இணைந்ததாகவும் அந்த பணிகள் நிறைவடைந்ததாகவும் அவரே தமது இன்ஸ்டா பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே லோகேஷ் குமார் இயக்கத்தில்  அனுபமா குமார், அக்‌ஷய் கமல், மைக்கேல் தங்கராஜ், அப்சல் ஹமீது, வினு ஷா, வடிவுக்கரசி மற்றும் பலர் நடித்துள்ள  N4 எனும் முழுநீள படத்தில் கேப்ரியல்லா நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES