ஜூனியர் என்.டி.ஆருக்கு கொரோனா பாதிப்பு

ஜூனியர் என்.டி.ஆருக்கு கொரோனா பாதிப்பு

தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக இருக்கும் ஜூனியர் என்.டி.ஆருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளத்தில் அவர் பதிவு செய்திருக்கிறார்.

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை இந்தியா முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதில் திரையுலக பிரபலங்களும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் ஜூனியர் என்.டி.ஆருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

ஜூனியர் என்டிஆர்

 

மேலும், யாரும் கவலைப்பட வேண்டாம். நான் நன்றாகவே இருக்கிறேன். எனது குடும்பமும் நானும் தனிமைப்படுத்தியுள்ளோம், மருத்துவர்களின் மேற்பார்வையில் அனைத்து நெறிமுறைகளையும் நாங்கள் பின்பற்றுகிறோம். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பு கொண்டவர்களை சோதிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்றும் பதிவு செய்திருக்கிறார்.

LATEST News

Trending News

HOT GALLERIES