பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிதாக வரப்போகும் நடிகை- யாருனு புகைப்படத்துடன் பாருங்க
விஜய் தொலைக்காட்சியின் ஹிட் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன்-தம்பிகள் என்றால் இவர்களை போல இருக்க வேண்டும் என்று எல்லோருமே ஆசைப்படுகிறார்கள்.
ஆனால் நிஜத்தில் எத்தனை அண்ணன்-தம்பிகள் இப்படி வாழ்கிறார்கள் என்பது தெரியாது.
இந்த சீரியலில் கடந்த சில வாரமாக சந்தோஷமாக நிகழ்வுகளாக நடந்து வருகிறது, மக்களும் ரசித்து வருகிறார்கள்.
ஆனால் இப்போது சீரியலில் ஒரு புது என்ட்ரீ வரப்போகிறார். புதிதாக வருபவர் என்று கூற முடியாது, காரணம் அண்மையில் மூர்த்தி திருமணம் பற்றிய பிளாஷ்பேக் காட்சி காட்டப்பட்டது.
அதில் மல்லியாக நடித்த நடிகை இப்போது மீண்டும் சீரியலில் வரப்போகிறார். இனி வரும் காலங்களில் அவரது டிராக் காண்பிக்கப்பட இருக்கிறது.
படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் ஷேர் ஆகி வருகிறது.