முன்னணி நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா - எவ்வளவு தெரியுமா
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வளம் வரும் நடிகை சமந்தா.
தமிழில் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து திருமணத்திற்கு பிறகும் தமிழில் மார்க்கெட் இலாகாத நடிகையாக இருக்கிறார்.
ஆம் கடந்த 2017ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை சமந்தா.
இந்நிலையில், சமந்தா - நாக சைதன்யா தம்பதியின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி சமந்தா - நாக சைதன்யா தம்பதியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.122 கோடியாம்.
இதில் சமந்தாவின் சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ.84 கோடி என்றும், நாக சைதன்யாவின் சொத்து மதிப்பு ரூ.38 கோடி என்றும் கூறப்படுகிறது.