அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ராட்சசன் 2 எப்போது - வெளியான சுவாரஸ்ய தகவல்

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ராட்சசன் 2 எப்போது - வெளியான சுவாரஸ்ய தகவல்

முண்டாசுப்பட்டி படத்தின் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால், இணைந்து நடித்து வெளியான படம் ராட்சசன்.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றிபெற்ற திரைப்படம் ராட்சசன். விஷ்ணு விஷால் இதுவரை நடித்த படங்களிலேயே இப்படம் தான் அதிக வசூல் குவித்தது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி ஐ.எம்.டி.பி இணையத்தில் அதிக புள்ளிகளைப் பெற்ற படம் என்ற சாதனையை ராட்சசன் நிகழ்த்தியது.

இந்நிலையில் ராட்சசன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது : " இயக்குனர் ராம்குமார், தனுஷ் படத்தை இயக்கி முடித்த பின் ராட்சசன் 2ஆம் பாகத்தை இயக்குவார் " என விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.  

LATEST News

Trending News