நம்ம சுந்தரியா இது? புகைப்படத்துடன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்த நல்ல விஷயம்!
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர் சுந்தரி. இந்தத் தொடரில் நாயகியாக நடித்து வருபவர் கேப்ரியல்லா. கருமை நிறம் என்பது எதற்கும் ஒரு தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் அடுத்தடுத்து முன்னேறிவரும் கேப்ரியல்லா தற்போது இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று அவருடைய ரசிகர்களிடையே பரவி பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் பெற்று வருகிறது.
இதற்கு காரணம் ஏ.ஆர்.ரஹ்மானின் முயற்சியில் உருவாகும் புதிய தனிப் பாடல் ஒன்றில் கேப்ரியல்லா இணைந்திருப்பதுதான். ஆம், மூப்பில்லா தமிழே தாயே என்கிற தனிப்பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கியுள்ளார். இந்த பாடலை தனி இசைக் கலைஞர்களுக்காக தாம் தொடங்கியுள்ள மாஜா எனும் இசை தளத்துக்கான புரோமோஷனுக்காக ரஹ்மான் உருவாகியுள்ளார்.
இசை உலகில் மிகப் பெரிய அதிர்வை ஏற்படுத்தி வருகிறது மாஜா தளம். இதன் கீழ் தான் தற்போது பிரபலமாக உள்ள என்ஜாயி எஞ்சாமி பாடல் வெளியிடப்பட்டது. இந்த தளத்தை மென்மேலும் கொண்டு சேர்க்கும் விதமாக மூப்பில்லா தமிழே தாயே என்கிற தனிப்பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து பாடி இருக்கிறார். இந்த பாடலின் வரிகளை தாமரை எழுதியிருக்கிறார். இதில் தான் சுந்தரி சீரியல் பிரபல நடிகை கேப்ரியல்லா இணைந்திருக்கிறார்.