தனுஷின் ஜகமே தந்திரம் திரைப்படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? வெளியான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

தனுஷின் ஜகமே தந்திரம் திரைப்படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? வெளியான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான கர்ணன், திரைப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று வெற்றியடைந்துள்ளது.

அதனை தொடர்ந்து தனுஷ் தற்போது The Grayman என்கிற ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வந்த தனுஷின் ஜகமே தந்திரம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

 ஆம், இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் இப்படம் Netflix-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

மேலும் தற்போது ஜகமே தந்திரம் திரைப்படம் வரும் ஜூன் 18 ஆம் தேதி Netfilx-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

LATEST News

Trending News

HOT GALLERIES