அஜித்திடம் மறைந்த நடிகர் விவேக் வைத்த வேண்டுகோள்- தல இதை செய்வாரா?
காமெடியாக படங்களில் நிறைய பேர் நடிக்கிறார்கள்.
ஆனால் அந்த காமெடியிலும் சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை வைத்து நடிப்பவர் விவேக் அவர்கள் தான். இவரும், அஜித்தும் இணைந்து நிறைய படங்கள் நடித்துள்ளார்கள்.
கடைசியாக அவர்களது கூட்டணிளில் விஸ்வாசம் படம் வெளியாகி இருந்தது. விவேக் அவர்கள் தான் நடித்த தாராள பிரபு புரொமோஷனில் கலந்துகொண்டார்.
அப்போது அவரிடம், பெரிய நடிகர் ஒருவருக்கு சவால் விடவேண்டும் என்றால் யாருக்கு கொடுப்பீர்கள் என கேட்கப்பட்டது. அதற்கு அவர், தல அஜித் தன்னுடைய ரசிகர்கள் ஒவ்வொருவரையும் ஒரு மரம் நட சொல்ல வேண்டும் என்பதுதான் அந்த சவால்.
இதனை அஜித் தன் வாயால் கூறவில்லை என்றாலும் வழக்கம்போல் அறிக்கை விடுவதை போல் வெளியிட்டாலே போதும் என்று கூறியிருந்தார். இது அஜித்திற்கு தெரியுமா, விவேக்கின் சவாலை ஏற்பாரு என்பது தெரியவில்லை.