சரத்குமார் மற்றும் ராதிகாவின் சிறை தண்டனையை நிறுத்தி வைத்தது நீதிமன்றம்!
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர் மற்றும் நடிகை தான் சரத்குமார், ராதிகா சரத்குமார். இவர்கள் 90-களில் தமிழ் சினிமவின் முன்னணி நட்சத்திரங்களாக விளங்கியவர்கள்.
மேலும் தற்போது இவர்கள் இருவரும் முழுநேர அரசியலில் இறங்கி, நடிகர் கமலின் கட்சியுடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டனர்.
இந்நிலையில் தற்போது நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் இருவருக்கும் செக் மோசடி வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் சென்னை எம்பி எம்எல்ஏ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தான் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி சரத்குமார் மற்றும் ராதிகா தரப்பில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதனிடையே தற்போது இவர்களின் ஓராண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்தது சென்னை சிறப்பு நீதிமன்றம்.