ரீ-ரிலீஸ் செய்யப்படும் 96 திரைப்படம்.. குஷியில் ரசிகர்கள்

ரீ-ரிலீஸ் செய்யப்படும் 96 திரைப்படம்.. குஷியில் ரசிகர்கள்

96 movie release: விஜய் சேதுபதி மற்றும் திரிஷா இணைந்து நடித்த பிளாக்பஸ்டர் வெற்றியடைந்த 96 திரைப்படம் 8 ஆண்டுகளுக்கு பின் ரீ-ரிலீஸ் ஆகிறது.

96

இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா முதல் முறையாக இணைந்து நடித்து கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 96. காதல் கதைக்களத்தை மையமாக வைத்து உருவான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

பள்ளி பருவ காதல், அதன்பின் ஏற்படும் பிரிவு, பல ஆண்டுகள் கழித்து சந்தித்துக்கொள்ளும் காதலர்கள், அவர்களுடைய ஒருநாள் இரவு பயணம், அதன்பின் மீண்டும் ஏற்படும் பிரிவு, ராமை விட்டு என்றும் பிரியாத ஜானுவின் அழகிய நினைவுகள் என 96 படம் நம் மனதை தொடர்ந்து வருடிக்கொண்டே இருந்தது.

ரீ-ரிலீஸ்

திரையரங்குகளில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படங்கள் சமீபகாலமாக ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 96 திரைப்படம் எப்போது ரீ-ரிலீஸ் ஆகும் என பலராலும் கேட்கப்பட்டு வந்தது.

ரீ-ரிலீஸ் செய்யப்படும் 96 திரைப்படம்.. குஷியில் ரசிகர்கள் | 96 Movie Re Release

இந்த நிலையில், வருகிற அக்டோபர் 9-ஆம் தேதி 96 திரைப்படம் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகிறது என தகவல் வெளியாகியுள்ளது. யாரெல்லாம் இப்படத்தை மீண்டும் திரையரங்கில் பார்க்க எதிர்பார்த்து காத்திருந்தார்களோ, அவர்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியை தந்துள்ளது.

LATEST News

Trending News