லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படத்தில் கமலும் இல்லை, விஜய்யும் இல்லை! அப்போ யார் தெரியுமா?

லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படத்தில் கமலும் இல்லை, விஜய்யும் இல்லை! அப்போ யார் தெரியுமா?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக மாறியுள்ளார், இவர் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மிக வெற்றியடைந்துள்ளது.

இவர் இயக்கத்தில் இதுவரை வெளியான மாநகரம், கைதி உள்ளிட்ட திரைப்படங்கள் மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்படவுள்ள நிலையில், விரைவில் மாஸ்டர் படத்தை ரீமேக் செய்யவுள்ளனர்.

இதனிடையே அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கமலின் விக்ரம் படத்தை இயக்குவார் என அறிவிக்கப்பட்டது, ஆனால் கமல் தற்போது அரசியலில் பிஸியாக இருப்பதால் இப்படம் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

மேலும் தளபதி 66, விஜய் சேதுபதி உடன் ஒரு திரைப்படம் என பல்வேறு தகவல் இவர் அடுத்து இயக்கும் படம் குறித்து பரவி வருகிறது.

 

இந்நிலையில் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்தாக பிரம்மாண்ட நடிகர் பிரபாஸின் படத்தை இயக்கவுள்ளதாகவும், இப்படம் வரும் 2022 முதல் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

LATEST News

Trending News

HOT GALLERIES