சிந்தாமணி செய்த சூழ்ச்சியால் மோசமான சத்யாவின் நிலைமை, கதறும் குடும்பம்... சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் வரவர பிரச்சனை பிரச்சனை பிரச்சனை என்று தான் ஒளிபரப்பாகி வருகிறது.
கடந்த சில வாரங்களாக அண்ணாமலை வீட்டின் கதைக்களம் சென்றது, சிந்தாமணி சூழ்ச்சிகளை தாண்டி வீடு அவர்கள் கையில் கிடைக்குமா இல்லையா என்பது தான் பெரிய போராட்டமாக இருந்தது.

எப்படியோ முத்து ஏதேதோ செய்து பணம் கொடுத்து வீட்டை மீட்டுவிட்டார். அந்த பிரச்சனை முடிந்த உடனே இப்போது புதுப்பிரச்சனை தொடங்கியுள்ளது, ஆனால் எதிர்ப்பார்த்த கதைக்களம் தான்.
எபிசோட்
சத்யாவை போலீஸ் வீட்டிற்கு வந்து கைது செய்கிறார்கள். காரணம் சத்யா ரேகாவை கடத்தி வைத்துள்ளார் என பெண்ணின் அப்பா புகார் கொடுக்க போலீசார் கைது செய்துள்ளனர்.
விஷயம் அறிந்து மீனா-முத்து போலீஸ் நிலையம் வந்து அதிகாரியிடம் கெஞ்சுகிறார்கள். சீதா மற்றும் அவரது அம்மா அங்கே பணிபுரியும் அருணிடம் உதவி கேட்கிறார்கள், அவரோ சத்யா கண்டிப்பாக தவறு செய்திருப்பார்.

அதனால் தான் போலீஸ் விசாரிக்கிறார்கள், என்னால் எதுவும் செய்ய முடியாது என கூலாக சொல்லிவிட்டு கிளம்புகிறார். ரேகா எங்கே சென்றார் என்பதை கண்டுபிடிக்க மீனா அவரது வீட்டிற்கு செல்கிறார், அப்போது சிந்தாமணி தனது கணவரிடம் பேசிவிட்டு செல்கிறார்.
அந்த நேரம் ரேகா வீட்டில் இருந்து துணி அயன் செய்பவர் வெளியே வர மீனா அவரிடம் பேச்சு கொடுக்கிறார், அவரிடம் இருந்து பையில் ரேகாவின் துணிகளும் உள்ளது. அப்படி மீனா சந்தேகத்தின் அடிப்படையில் விசாரிக்க ரேகா அவரது வீட்டிலேயே இருப்பது தெரிய வருகிறது.
போலீசிடம் தர்ம அடி வாங்கும் சத்யாவை மீனா-முத்து எப்படி காப்பாற்ற போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து காண்போம்.