Fun Roast Review: அன்று தியேட்டரில் ஆரவாரம்.. இன்று ஆல்ஃபா கிட்ஸின் ரோஸ்ட்: அஜித் படம் ஒரு ரீ-விசிட்

Fun Roast Review: அன்று தியேட்டரில் ஆரவாரம்.. இன்று ஆல்ஃபா கிட்ஸின் ரோஸ்ட்: அஜித் படம் ஒரு ரீ-விசிட்

சென்னை: தமிழ் சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியை ஈட்டிய படங்கள் குறித்து இன்றைய தலைமுறை இளசுகளிடம் கூறினால், "அய்யய்யோ இப்படி ஒரு படமா?, இந்த படம் எப்படி சக்சஸ் ஆச்சு?" என்று கேள்வி எழுப்புகிறார்கள். இன்னும் 90களிலும் 80களிலும் வெளியான படங்களின் கதை, திரைக்கதை குறித்து எல்லாம் சிலாகித்து பேசினால், சரியான பூமர் கதையா இருக்குதே என்று ஒரே வார்த்தையில் முடித்துவிடுகிறார்கள். உடனே பதிலுக்கு அந்த படத்தில் நடித்தவர்கள் யார் என்று தெரியுமா? அந்த இயக்குநர் எவ்வளவு பெரிய அறிவு ஜீவி தெரியுமா? எதுவும் தெரியாமல் இப்படி ஒரே வார்த்தையில் விமர்சிக்காதே என்று சொன்னால், உடனே எனக்கு கனெக்ட் ஆகலனா, ஆகல தான்.. உங்களுக்கு ஆஹா.. ஓஹோ லெவலுக்கு இருந்தால் தலையில் வைத்து கொண்டாடுங்கள் என்று பதில் வருகிறது.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி, அஜித், த்ரிஷா, அருண் விஜய் உள்ளிட்டவர்கள் நடித்து கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் படத்தை, கடந்த வாரத்தில் பார்க்க நேர்ந்தது. அப்போது ஜென் ஆல்ஃபா தலைமுறையைச் சேர்ந்த எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் அந்த சிறுவனை, என்னோடு சேர்ந்து என்னை அறிந்தால் படத்தை எப்படியோ பார்க்க வைத்துவிட்டேன். படம் பார்க்க இடையிடையே, இந்த சீன்ல தல மாஸா இருக்காருல்ல, ஹாரிஸ் ஜெயராஜ் மியூசிக் பட்டையக் கிளப்புதுல. சத்யதேவ் ஐபிஎஸ் என்று அஜித் சொல்லும் காட்சி வரும்போது எல்லாம் ஈரோடு ஸ்ரீனிவாசா தியேட்டரில் முதல் நாள் முதல் காட்சியில் மொத்த தியேட்டரும் ரசிகர்களின் ஆரவாரத்தால் அதிர்ந்தது என்றெல்லாம் கூறினேன்.

Fun Roast Review  Gen Alpha Rewatches Ajith   s Yennai Arindhaal and Delivers a Brutally Honest Verdict

மொத்த படத்தையும் பார்த்த எங்கள் வீட்டு ஜென் ஆல்ஃபா தனது விமர்சனத்தை, இல்லை.. இல்லை.. என்னை அறிந்தால் ரோஸ்ட்டை குக் செய்ய ஆரம்பித்தார் என்று கூறலாம். அதாவது, " இந்த சத்ய தேவ் கதாபாத்திரம் போலீஸா? இல்லை வேற எதுவுமா? படம் முழுக்க ஏன் தத்துவமாவே பேசிகிட்டு இருக்காரு? ஒரு விஷயத்தை நேரடியாவே சொல்லத் தெரியாதா? வில்லனுக்கு நேரா துப்பாக்கிய நீட்டிட்டு அதுல நல்லவன், கெட்டவன்னு பிரிச்சுக்கிட்டு இருக்காரு. டயலாக் எல்லாம் ஏதோ இன்ஸ்டாகிராமில் பிலாசபி பேஜ்ல வர்ற மாதிரி இருக்கு. யாருமே நார்மலா பேசமாட்டாங்களா?

போலீஸா? இல்லை வேறயா?: இதெல்லாம் இருக்கட்டும்.. சத்யதேவ் போலீஸ் தானா? த்ரிஷாவை பார்த்ததில் இருந்து அவரு வேலை செஞ்ச மாதிரியே தெரியலயே.. ஓ.பி அடிக்கிற போலீஸா மாறிட்டாரு.. ஊரு எல்லாம் வம்பு இழுத்து வெச்சுருக்கிற அவரு, மட்டும் சரியா வேலை பார்த்திருந்தால் த்ரிஷா செத்திருக்கவே மாட்டாங்க என்று சொன்னதும் சரியான ஷாக். ஒர்க்- லைஃப் பேலன்ஸ் பண்ணத் தெரிஞ்ச போலீஸ்னே வச்சுக்கிட்டாலும், த்ரிஷாவை கோட்டை விட்டுட்டாரே? விக்டர் வந்து கொன்னுட்டு போயிட்டானே. படத்துலயே உருப்புடியான கதாபாத்திரம்னா அது விக்டர் தான்.

Fun Roast Review  Gen Alpha Rewatches Ajith   s Yennai Arindhaal and Delivers a Brutally Honest Verdict

விக்டர் தான் மாஸ்: விக்டர் எங்கையும் தன்னோட நோக்கத்திலிருந்து மாறவே இல்லை. படம் சுமார் தான்.. ஆனால் விக்டர் வின் த ஹார்ட். அதே மாதிரி படம் முழுக்க மியூசிக் நல்லா இருந்துச்சு. நீங்க சொல்ற மாதிரி சில்லறையை சிதறவிடலாம்னு சொல்ற சீன்னு சொல்லனும்னா அது விகடர் வர்ற சீன்கள் தான். அதுவும் அந்த போன் கால் சீன் விக்டர் ஸ்கோர் செஞ்சுட்டாருனு சொல்லிவிட்டு, நகர, ஸ்டார் ரேட்டிங் எவ்வளவு கொடுப்பீங்க மிஸ்டர் ஆல்ஃபா என்று கேட்டதற்கு, ஆல்ஃபா சொன்ன பதில் எனக்கே அதிர்ச்சியைக் கொடுத்ததால், அதைச் சொல்லாமல் தவிர்க்கிறேன். 100 நாளுக்கு மேல் தியேட்டரில் ஓடிய என்னை அறிந்தால் படத்தையே அசால்ட்டாக தட்டிவிட்டுப் போகும் இந்த ஆல்ஃபா கிட்களை திருப்தி படுத்த திரையுலகம் ரொம்பவும் மெனக்கெடவேண்டும் என்பது மட்டும் புரிந்து கொண்டேன்.

Fun Roast Review  Gen Alpha Rewatches Ajith   s Yennai Arindhaal and Delivers a Brutally Honest Verdict

துருவ நட்சத்திரம்: இது ஒரு புறம் இருந்தாலும், இந்த காலத்து ஆல்ஃபா கிட்ஸ்கள் பலருக்கும் கௌதம் வாசுதேவ் மேனனின் மேக்கிங் ஸ்டைல், டயலாக் எல்லாம் உடனே கனெக்ட் ஆகாமல் போகலாம் என்பதை அந்த கான்வெர்ஷேசனில் புரிந்து கொண்டாலும், அவரது இயக்கத்தில் உருவாகி உள்ள துருவ நட்சத்திரம் எந்த அளவுக்கு சமகால இளசுகளை கனெக்ட் செய்யும் என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

LATEST News

Trending News

HOT GALLERIES