திருமணத்தின் போது மோசமாக நடந்துகொண்ட தாஸ், நிலா செய்த காரியம்... அய்யனார் துணை சீரியல்
அய்யனார் துணை
அய்யனார் துணை எப்பாடா, ஒரு திருமண எபிசோட் தமிழ் சின்னத்திரையில் பிரச்சனை இல்லாமல் சில மாதங்கள் ஓட்டாமல் உடனே முடிந்த திருமண எபிசோட் இதுவாகத்தான் இருக்கும் என ரசிகர்கள் கொண்டாடும் சீரியல் அய்யனார் துணை.
சீரியலிலேயே ரசிகர்கள் கொண்டாடும் முக்கிய ஜோடியாக இருக்கும் நிலா-சோழன் திருமணம் அனைவரின் முன்னிலையில் சூப்பராக நடந்து முடிகிறது.
எபிசோட்
இன்றைய எபிசோடில் ஆரம்பத்தில் திடீரென தாலியை காணவில்லை என சேரன், பாண்டியன், பல்லவன் பதறுகிறார்கள்.
நிலா அம்மா-அப்பா இதைகூட பத்திரமாக வைக்க மாட்டார்களா என பேசிக்கொள்ள சோழன் இதனால் நிலாவை கூட்டுக்கொண்டு சென்றுவிடுவார்களோ என பயப்படுகிறார்.

பின் தாலி கிடைத்துவிட சந்தோஷமாக சோழன் நிலா கழுத்தில் தாலியை கட்டுகிறார். பின் நிலா அப்பா தாஸை சோழனுக்கு முறை செய்ய கூறுகிறார், அவர் செயினை சோழன் கழுத்தில் போட சொன்னால் காதில் மாட்டிவிட்டு செல்கிறார்.
அதைப்பார்த்து அங்கிருந்தவர்கள் முகம் மாற பின் நிலா செயினை சரி செய்து சோழனிடம் மன்னிப்பு கேட்கிறார். திருமணம் முடிந்த கையோடு அடுத்து வீட்டிற்கு சென்று பேசுகிறார்கள்.