விஜய்யின் வசூல் சாதனைகளை முறியடித்த சூர்யாவின் கருப்பு.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
கருப்பு
கடந்த மே மாதம் வெளிவந்து தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பிக் கொண்டு இருக்கும் திரைப்படம் கருப்பு. ஆர்.ஜே. பாலாஜி - சூர்யா கூட்டணியில் உருவான இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்க, சாய் அப்யங்கர் இசையமைத்திருந்தார்.

மே 15ஆம் தேதி வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், கருப்பு சாமியை மையமாக வைத்து உருவான இப்படத்தை ரசிகர்கள் தலை மேல் வைத்து கொண்டாடி வருகிறார்கள். இதனால் வசூலில் ஒவ்வொரு நாளும் புதுப்புது சாதனைகளை கருப்பு படைத்து வருகிறது.
பாக்ஸ் ஆபிஸ்
இந்த நிலையில், தற்போது உலகளவில் கருப்பு திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இதுவரை இப்படம் ரூ. 312 கோடி வசூல் செய்துள்ளது.
இதன் மூலம் விஜய்யின் பிகில், வாரிசு ஆகிய திரைப்படங்களின் வசூல் சாதனையை கருப்பு முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.