Nayanthara: பசங்கள வெச்சுக்கிட்டே ரொமான்ஸ் மூடில் நயன்தாரா - விக்கி.. பின்னால் இருக்கும் உதயசூரியன்

Nayanthara: பசங்கள வெச்சுக்கிட்டே ரொமான்ஸ் மூடில் நயன்தாரா - விக்கி.. பின்னால் இருக்கும் உதயசூரியன்

சென்னை: நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதியர் தென்னிந்திய சினிமாவில் இருக்கும் பிரபலமான தம்பதியர்களில் ஒரு ஜோடி. இவர்கள் பகிரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் கொடுக்கப்படும் ஆதரவு மற்ற சினிமா தம்பதியர்களுக்கு கிடைப்பதில்லை. இப்படி இருக்கையில் நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவர் விக்னேஷ் சிவன் உடன் செம்ம ரொமான்டிக்காக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அவை ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர். இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தென்னிந்திய சினிமாவில் கொடி கட்டிப் பறந்து வருகிறார். சுமார் நான்கு தலைமுறை நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், அஜித், விஜய், சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட மூன்று தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்த படங்கள் வெளியாகி உள்ளது. அதேபோல் அடுத்ததாக நடிகர் கவின் உடன் இணைந்து நடித்த படமும் வெளியாக உள்ளது. இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

Nayanthara and Vignesh Shivan Share Romantic Family Moments With Sons in Viral Sunrise Photos

இப்படி இருக்கையில் அவரது நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் டாக்ஸிக். இந்த படம் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது. அதேபோல் மூக்குத்தி அம்மன் 2 படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த படமும் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரொமான்ஸ்: நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியர் பகிரும் புகைப்படங்களுக்கு எப்போதுமே தனி வரவேற்பு உள்ளது. அதுவும் அவர்கள் வருடத்தில் 100 நாட்கள் குடும்பத்துடன் வெளிநாடு செல்வது, சுற்றுலா செல்வது என பல விஷயங்களில் கட்டாயம் ஈடுபட்டு வருகிறார்கள். அப்படி அவர்கள் குடும்பமாக செம்ம ஜாலியாக இருக்கும் தருணங்கள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு உள்ளது.


Nayanthara and Vignesh Shivan Share Romantic Family Moments With Sons in Viral Sunrise Photos

அழகான புகைப்படங்கள்: அதுவும் குழந்தைகளுடன் நயன்தாரா இருக்கும் புகைப்படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு என்பது தனி. இவர்களின் இரட்டை மகன்களான உயிர் மற்றும் உலக் என இருவருடனும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியர் ஜாலியாக விளையாடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது வருகிறது.

உதிக்கும் சூரியன்: அந்த வகையில் நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் செம்ம ரொமான்டிக்காக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இது மட்டும் இல்லாமல் தனது மகன்களுடன் வாஞ்சையாக விளையாடும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். குறிப்பாக காலையில் சூரியன் உதிக்கும் வேளையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் என்பதால் அவை பார்ப்பதற்கே ரம்மியமாக இருக்கிறது என்று பலரும் லைக்குகளை அள்ளி வீசி வருகிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES