விருமாண்டி அபிராமியை நியாபகம் இருக்கா?.. இந்த கேரக்டரை எல்லாம் மிஸ் செஞ்சுட்டாங்களாம்.. ஓபன் டாக்

விருமாண்டி அபிராமியை நியாபகம் இருக்கா?.. இந்த கேரக்டரை எல்லாம் மிஸ் செஞ்சுட்டாங்களாம்.. ஓபன் டாக்

சென்னை: அபிராமி படத்தின் மூலம் பிரபலமானவர் அபிராமி. அந்தப் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்த அவர் அதற்கு பிறகு பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் திடீரென திருமணம் செய்துகொண்டு வெளிநாடு சென்று செட்டிலாகிவிட்டார். அது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது . சில வருடங்கள் கழித்து மீண்டும் நடிக்க வந்த அவர்; இப்போது பிஸியாக நடித்துவருகிறார். இந்நிலையில் அவரது பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட அபிராமி குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர். 1995ஆம் ஆண்டு வெளியான காத்தபுருஷன் என்ற படத்தின் மூலம்தான் அவர் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து மலையாளத்தில் பத்ரம், ஸ்ரதா, மில்லினியம் ஸ்டார்ஸ் உள்ளிட்ட படங்களில் நடிகையாக நடிக்க ஆரம்பித்துவிட்டார். சூழல் இப்படி இருக்க 2001ஆம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளியான வானவில் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் அபிராமி. படம் டீசண்டான வரவேற்பையே பெற்றது. அபிராமியின் நடிப்பும் கவனம் ஈர்த்ததன் காரணமாக அவருக்கு தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் கிடைத்தன. அதன்படி மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின், கார்மேகம், சமஸ்தானம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

I Wish I Had Done Simran and Trisha s Roles Abhirami s Honest Confession Goes Viral

அபிராமி நல்ல நடிகை: தான் நடித்த ஒவ்வொரு படத்திலும் தன்னை ஒரு நல்ல நடிகையாக அடையாளப்படுத்திக்கொண்டார். கோலிவுட்டும் அபிராமிக்கு அழகு மட்டும் இல்லை திறமையும் இருக்கிறது என்பதை கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பித்தது. அப்படிப்பட்ட சூழலில்தான் அபிராமிக்கு எளிதில் யாருக்கும் கிடைத்திடாத மிகப்பெரிய வாய்ப்பு ஒன்று கிடைத்தது.

அன்னலட்சுமி: கமல் ஹாசன் நடிப்பில் உருவான விருமாண்டி படத்தில் அபிராமிக்கு வாய்ப்பு கிடைத்தது. அன்னலட்சுமி என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார் அவர். கமல் ஹாசனுடன் நடிக்கும்போது அவருக்கு ஈடுகொடுத்து நடிப்பது அவ்வளவு சாதாரணமில்லை. அதனை விருமாண்டியில் மிகச்சாதாரணமாக செய்தார். மதுரை ஸ்லாங்கை பேசி தைரியமான பெண்மணியாக நடித்து அப்ளாஸை அள்ளினார் அபிராமி. அதனையடுத்து பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்த்த சூழலில்; திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

ரீ என்ட்ரி: திருமணமான கையோடு சில வருடங்கள் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் இரண்டாவது இன்னிங்ஸை மாறா படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து வேட்டையன், மகாராஜா, தக் லைஃப், கருடன், ஜாலியோ ஜிம்கானா உள்ளிட்ட படங்களில் நடித்தார். அடுத்ததாக அவர் நடிப்பில் பிளாஸ்ட் என்ற படமும் வரவிருக்கிறது. இந்நிலையில் அவர் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர், "தமிழில் எனக்கு பிடித்த கேரக்டர்கள் அல்லது செய்திருக்கலாமே என்று நினைத்த கேரக்டர்கள் எனக்கு நிறைய இருக்கின்றன. டூரிஸ்ட் ஃபேமிலியில் சிம்ரன் ஏற்றிருந்த ரோல்; 96 படத்தில் திரிஷா ஏற்றிருந்த ஜானு ரோலை எல்லாம் பார்க்கையில் இதை நாம் செய்திருக்கலாமே என்று தோன்றும்" என்றார்.

LATEST News

Trending News

HOT GALLERIES