வாரிசு நடிகருக்கு ஜோடியாக கோலிவுட்டில் களமிறங்கும் ஜான்வி கபூர்.. யார் அந்த ஹீரோ தெரியுமா

வாரிசு நடிகருக்கு ஜோடியாக கோலிவுட்டில் களமிறங்கும் ஜான்வி கபூர்.. யார் அந்த ஹீரோ தெரியுமா

ஜான்வி கபூர்

ஜான்வி கபூர் பாலிவுட்டில் அறிமுகமாகி தற்போது தென்னிந்திய சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். தேவரா படத்தின் மூலம் தெலுங்கில் என்ட்ரி கொடுத்த இவர், அடுத்ததாக ராம் சரணுடன் இணைந்து பெத்தி எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வருகிற ஜூன் மாதம் வெளியாகிறது.

இந்த நிலையில், நடிகை ஜான்வி கபூர் அடுத்ததாக தமிழில் என்ட்ரி கொடுக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் என்ட்ரி

துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தில்தான் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகவிருக்கிறாராம். முன்னதாக இப்படத்தில் ருக்மிணி வசந்த் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது ஜான்வி கபூரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

 

வாரிசு நடிகருக்கு ஜோடியாக கோலிவுட்டில் களமிறங்கும் ஜான்வி கபூர்.. யார் அந்த ஹீரோ தெரியுமா | Janhvi Kapoor Set To Entry In Kollywood

இப்படத்தை தீபக் ரெட்டி என்பவர் இயக்க உள்ளதாகவும் இளம் சென்சேஷனல் சாய் அப்யங்கர் இசையமைக்க இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர். 

LATEST News

Trending News

HOT GALLERIES