ரூ.25 லட்சம் தரேன்.. பார்ம்ஹவுஸுக்கு வா..நள்ளிரவில் வந்த கால்.. நொந்துபோன பிக்பாஸ் பிரபலம்!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ஒருவர் ரூ.25 லட்சம் வழங்குவதாக ஆசை காட்டி பண்ணை வீட்டுக்கு அழைத்ததாக வெளிப்படையாக கூறி சினிமா வட்டாரத்தில் புயலை கிளப்பி உள்ளார். தெலுங்கு பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கிர்ராக் சீதா, அண்மையில் அளித்த பேட்டியில் இந்த பகீர் தகவலை கூறியுள்ளார்.
நடிகை கிர்ராக் கீதா, சிறு வயதிலிருந்தே கலைகளில் ஆர்வம் கொண்டவர். கூச்சிப்புடி மற்றும் பரதநாட்டியம் போன்ற நடனங்களில் பயிற்சி பெற்றவர். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இவர், படித்துக்கொண்டு இருக்கும் போதே டியூஷன் எடுத்து குடும்பத்திற்கும் உதவி செய்துள்ளார். பின் யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் ஷார்ட் பிலிம்ஸ், காமெடி மற்றும் போல்டான வீடியோக்கள் மூலம் பிரபலமானார்.

நடிகை கிர்ராக் சீதா: அதன்பிறகு வெப் கண்டென்ட் மற்றும் குறும்படங்களில் தொடர்ந்து நடித்து வந்த அவர், 'பேபி' திரைப்படத்தின் மூலம் பெரிய திரையில் கவனம் ஈர்த்தார். அந்த படத்தில் இவர் நடித்த நெகட்டிவ் கதாபாத்திரம் ரசிகர்களிடம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. அவரது இயல்பான நடிப்பு காரணமாக சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனத்திற்குள் உள்ளானார். இதைத்தொடர்ந்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கிரராக் சீதா, தன்னுடைய நேர்மையான அணுகுமுறையால் ரசிகர்களின் கவனத்தை பெற்று சுமார் 40 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்தார்.
பார்ம்ஹவுஸுக்கு வா: இந்நிலையில் அண்மையில் கிர்ராக் சீதா அளித்து இருக்கும் பேட்டியில் அவர் பகிர்ந்த தகவல் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. "7 ஆர்ட்ஸ் ஷூட்டிங்கில் இருந்தபோது ஒரு நபர் சினிமா வாய்ப்பு இருப்பதாக அழைத்தார். அப்போது எனக்கு 21 வயது தான். படம் குறித்து பேசும்போது, பார்ம்ஹவுஸுக்கு வர சொல்லினார். 'ஆபீஸ் இருந்தால் அங்கே வருகிறேன்... பார்ம்ஹவுஸுக்கு ஏன் வர வேண்டும்?' என்று நான் கேட்டேன். ஆனால், அவர் முழு டீமும் அங்கேதான் இருப்பதாக கூறினார்.
நடிகை வேதனை: எனக்கு அது சரியாக தோன்றாததால் நான் செல்லவில்லை. அதன்பிறகு அந்த நபரில் இருந்து எனக்கு தொடர்ந்து அழைப்புகள் வந்தன. சில நாட்கள் கழித்து மீண்டும் தொடர்பு கொண்டு, 'ஏன் வரவில்லை?' என்று கேட்டார்கள். நான் மறுத்ததும், உங்களுக்கு ரூ.25 லட்சம் தருகிறோம் என்றார். இதைக்கேட்டதும் நான் அதிர்ச்சி அடைந்துவிட்டேன். ஆனால், பணத்திற்காக இப்படிப்பட்ட விஷயங்களில் ஈடுபட முடியாது என்று நேராக சொல்லிவிட்டேன். திரைப்பட வாய்ப்புகள் தருவதாக கூறி இளம் பெண்களை தவறாக பயன்படுத்த முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுவருகிறது. புதிதாக வரும் நடிகைகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.