"பிரபல சீரியல் நடிகையின் அந்த உறுப்பின் மீது வாட்டர்மெலான் STAR..?" மா.கா.பா சொன்ன பகீர் பின்னணி!
சென்னை : விஜய் டிவியின் பிரபல காமெடி ரியாலிட்டி ஷோ குக் வித் கோமாளி (Cook with Comali) 7-வது சீசன் படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட மோதல் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
வாட்டர் மெலன் ஸ்டார் என்று அழைக்கப்படும் திவாகர் (பிக் பாஸ் புகழ்), மா.க.பா ஆனந்த், புகழ், கானா வினோத் உள்ளிட்டோர் மீது தாக்குதல், தகாத வார்த்தைகள், மிரட்டல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அவர், மது போதையில் இருந்த ஆனந்த் தன்னை இரும்பு ராடால் தாக்கியதாகவும், ரத்தக் காயம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.
இதற்கு மா.க.பா ஆனந்த் தரப்பில் கடும் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீஸ் நிலையம் முன்பு பேசிய ஆனந்த், “உங்க குடும்பத்தோடோ, உங்ககூட வந்த பெண்களைப் பற்றியோ யாராவது தவறாகவோ, ஆபாசமாகவோ பேசினா நீங்க என்ன பண்ணுவீங்க? அதேபோல நானும் ரியாக்ட் செய்தேன்” என்றார்.
மேலும், திவாகர் சமீபத்தில் பெண்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களைப் பற்றி தவறான, ஆபாசமான கருத்துகளைப் பேசியதால் செட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதாக ஆனந்த் தரப்பு தெரிவித்தது.
“அவர் என்னைப் பார்த்து ‘நான் தான் அவரை வேலையை விட்டு தூக்கினேன்’னு நினைச்சிருக்கார். புகழ், வினோத் மீது பொறாமை காரணமாக இந்த அலிகேஷன் வைக்கிறார். ஒவ்வொரு 3-6 மாதத்துக்கு ஒரு தடவை இப்படி கண்டென்ட் போட்டு ஃப்ரீ பப்ளிசிட்டி வாங்குறார்” என்றும் குற்றம் சாட்டினார்.
மது அருந்தியதா? தாக்குதலா?
திவாகர் தரப்பில் “மது அருந்திய நிலையில் தாக்கினார்” என்ற குற்றச்சாட்டுக்கு ஆனந்த் தரப்பு பலமான எதிர்ப்பு தெரிவித்தது. “குடித்துவிட்டு 18 மணி நேரம் ஷூட்டிங்கில் நிற்க முடியுமா? நான் ஒரு நாள் ஷூட்டிங் என்றால் நீண்ட நேரம் நிற்பேன்” என்று கூறிய ஆனந்த், திவாகர் ஒரு பெண்ணிடம் “நடிகை ஒருவரின் தோள் மீது கையைப் போட்டு... செல்லம்... இவ்வளவு நாள் உங்க வீட்டுக்காரரோட இருந்துட்ட.. ஒரு நாள் என்கூட இருந்து பாரேன்” என்று பேசியதை சுட்டிக்காட்டி, “இது காமெடியா? அந்தப் பெண்ணுக்கு எப்படி இருக்கும்?” என்று கேள்வி எழுப்பினார்.
ஆனந்த் தரப்பு மேலும், “வீடியோ ப்ரூஃப் காட்டுங்கள். அப்படி காட்டினா நாங்க தப்பு பண்ணிட்டோம்னு ஒத்துக்குறோம். இல்லைன்னா இது டார்ச்சர்” என்று வலியுறுத்தியது.
ஏற்கனவே திவாகர் பல நிகழ்ச்சிகளுக்கு (பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்டவை) வந்து கொண்டிருந்ததாகவும், ஆனால் சமீபத்தில் அவரது நடத்தை காரணமாக வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தமிழ் புத்தாண்டு அன்று போலீஸ் ஸ்டேஷன் வாசலில் நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாக ஆனந்த் வருத்தம் தெரிவித்தார். “இந்த மாதிரி கருமம் பிடிச்சவங்க எல்லாம் இப்படி பண்ணினா நம்ம என்கரேஜ் பண்றோம்” என்றும் கூறினார்.
தற்போதைய நிலை
இரு தரப்பும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வரும் நிலையில், போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது. முழு உண்மை வெளியாகும் வரை பார்வையாளர்கள் பொறுமையாக இருக்குமாறு இரு தரப்பும் வேண்டுகோள் விடுத்துள்ளன.
இந்த சம்பவம் தமிழ் டிவி தொழிலில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. ஒரு காமெடி ஷோ சீரியஸான சட்டப் பிரச்னையாக மாறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணை முடிவுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.