35 வயதில் மரணமடைந்த கேம் ஆஃப் த்ரோன்ஸ் நடிகர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

35 வயதில் மரணமடைந்த கேம் ஆஃப் த்ரோன்ஸ் நடிகர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

கேம் ஆஃப் த்ரோன்ஸ்

உலக புகழ்பெற்ற வெப் தொடர்களில் ஒன்று கேம் ஆஃப் த்ரோன்ஸ். 2011ஆம் ஆண்டு தொடங்கிய இந்த வெப் தொடர் 2019ஆம் ஆண்டு 8வது சீசனில் நிறைவு பெற்றது.

இந்த வெப் தொடரில் பீட்டர் டிங்க்லேஜ், எமிலியா கிளார்க், லெனா ஹெடி, கிட் ஹாரிங்டன் போன்ற பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

 

மைக்கேல் பேட்ரிக்

இவர்களுடன் இணைந்து Wildling கூட்டத்தில் ஒருவராக நடித்திருந்தவர் நடிகர் மைக்கேல் பேட்ரிக். கேம் ஆஃப் த்ரோன்ஸ் வெப் தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் மைக்கேல் பேட்ரிக்.

35 வயதில் மரணமடைந்த கேம் ஆஃப் த்ரோன்ஸ் நடிகர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் | Game Of Thrones Actor Died At Age Of 35

இந்நிலையில், நடிகர் மைக்கேல் பேட்ரிக் தனது 35 வயதில் மரணமடைந்துள்ளார். இவர் மோட்டார் நியூரோன் நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த நோயுடன் போராடி கொண்டிருந்த நடிகர் மைக்கேல் பேட்ரிக், நேற்று ஏப்ரல் 8ஆம் தேதி மரணமடைந்துள்ளார்.

35 வயதில் மரணமடைந்த கேம் ஆஃப் த்ரோன்ஸ் நடிகர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் | Game Of Thrones Actor Died At Age Of 35

இவருடைய மறைவு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பலரும் தங்களது இரங்கல்களை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர். 

LATEST News

Trending News

HOT GALLERIES