தமிழ் நடிகைகளுக்கு நடிக்கவே தெரியாது..இதைதான் செய்றாங்க!! நடிகை மாளவிகா மோகனனை விலாசும் நெட்டிசன்கள்..
இந்தியளவில் பிரபலமான நாயகியாக வலம் வருகிறார் மாளவிகா மோகனன். தமிழில் ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமான இவர், விஜய்யின் மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்தார். இப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. கடந்த ஆண்டு தமிழில் வெளிவந்த தங்கலான் படத்தில் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் அசரவைத்தார்.
தற்போது, சர்தார் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான தி ராஜா சாப் படத்திலும் முக்கிய ரோலில் நடித்திருந்தார் மாளவிகா.

இந்நிலையில், அவர் அளித்த பேட்டியொன்றில் தமிழ் நடிகைகள் பற்றி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதில், தமிழ், தெலுங்கு நடிகைகள் சிலர் சரியக நடிப்பதில்லை, சோக காட்சிகளில் அவர்கள் மனதுக்குள் 1,2,3,4 என எண்ணிக்கொண்டு சோகமான முக பாவனைகளை வெளிப்படுத்துகிறார்கள். கோப காட்சிகள் என்றால் ஏபிசிடி என சொல்லிக்கொண்டு ஒரே மாதிரி நடிக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய உதட்டசைவை மட்டும் சரியாக செய்து டப்பிங்கில் பார்த்துக்கொள்கிறார்கள். ஒரு படத்திற்கு மட்டும் அவர்கள் இப்படி செய்வதில்லை, தங்கள் கரியர் முழுவதும் இதையே செய்கிறார்கள் என்று மாளவிகா மோகனன் பேசியிருக்கிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் தங்கலானில் அவர் நடிப்பு சிரிப்பைத்தான் வரவழைத்தது, இவரெல்லாம் நடிப்பு குறித்து பேசிகிறார் என்று கிண்டலடித்து வருகிறார்கள்.