காதலர் தினத்தில் மிருணாள் தாகூரை கரம் பிடிக்கும் தனுஷ்?
நடிகர் தனுஷ் மற்றும் நடிகை மிருணாள் தாக்குர் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக சமூக வலைதளத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. நண்பர்கள், குடும்பத்தினர் முன்னிலையில் காதலர் தினத்தில் இந்த திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தனுஷும் மிருணாள் தாக்குரும் காதலிப்பதாக வதந்திகள் பரவி வருகின்றமை அனைவரும் அறிந்தது தான். அடிக்கடி அவர்கள் ஏதாவது நிகழ்ச்சியில் பங்கேற்றால் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகி வந்தன.

நடிகர் தனுஷும், ஐஸ்வர்யா இருவரும் காதலித்து திருமணம் செய்த நிலையில் 20 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தனர். இவர்களுக்கு லிங்கா, யாத்ரா என இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் இருவரும் பிரிவதாக சமூகவலைத்தளங்களில் அறிவித்தனர்.

இருவரையும் சேர்த்து வைப்பதற்கு குடும்பத்தினர் பல முயற்சிகளை மேற்கொண்ட போதும் இருவரும் பிரிய வேண்டும் என்று உறுதியாக இந்தனர்.
இருவரிடமும் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சுபாதேவி ரகசிய விசாரணை நடத்திய போது, இருவருமே பிரிவதில் உறுதியாக இருப்பதாக நீதிபதியிடம் தெரிவித்தததையடுத்து, நவம்பர் 2024-ல், நீதிமன்றத்தில் இருவரும் ஆஜரான பிறகு, அவர்களுக்கு விவாகரத்து வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இருவரும் விவாகரத்து பெற்றாலும், தங்கள் மகன்களான யாத்ரா மற்றும் லிங்காவுடன் பெற்றோர்களாக இணைந்து செயல்படுகிறார்கள்.
இந்நிலையில், காதலர் தினமான எதிர்வரும் 14ஆம் திகதி நடிகர் தனுஷ் மற்றும் நடிகை மிருணாள் தாக்குர் இருவருக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் மூலம் தெரிய வருகின்றன. இருப்பினும் இருவரும் இது குறித்து மறுப்பு அல்லது உறுதிபடுத்தல் எதுவுமே தெரிவிக்கவில்லை.

முன்னதாக மிருணாள் தாக்கூர் நடிப்பில் வெளியான ‘சன் ஆஃப் சர்தார்’ படத்தின் சிறப்பு திரையிடலின் போது நடிகர் தனுஷ் மும்பை சென்று அதில் கலந்துகொண்டார்.அப்போது தனுஷ் - மிருணாள் தாக்கூர் இருவரும் கைகோர்த்து நடந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

அடுத்து தனுஷின் ‘தேரே இஷ்க் மே’ படத்தின் வெற்றிவிழாவில் மிருணாள் தாகூர் கலந்துகொண்டிருந்தார். ஆனால், படத்தில் அவர் நடிக்கவில்லை. இருப்பினும் விழாவில் தனுஷூக்காக கலந்துகொண்டதாக பேசப்பட்டது.

சமீபத்தில் இருவரும் அவர்களது இன்ஸ்டாகிராம் பதிவில் கமெண்ட் செய்து வந்ததும் ரசிகர்களிடையே சந்தேகத்தை எழுப்பியமை குறிப்பிடத்தக்கது.