நடிகையின் ஒரே ஆடை!! ரூ.29 லட்சம் கோடி சம்பாதித்த பிரபல நிறுவன!! வரலாறு முக்கியம்...
1991ல் In Living Color என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடன கலைஞராக தன்னுடைய பயணத்தை ஆரம்பித்த் பின், 1997ல் வெளியான செலீனா என்ற படத்தின் மூலம் புகம்பெற்றவர்தான் நடிகை ஜெனிபர் லோபஸ். ஒரு படத்திற்கு சுமார். 1 மில்லியன் டாலர் சம்பளமாக பெற்று வரும் லத்தீன் அமெரிக்க நடிகை ஜெனிபர், J'Lo என்று அழைக்கப்ட்டும், பாடகி, நடன கலைஞர் என்று பன்முகத்திறமை கொண்டு பிரபலமானார்.

நடிப்பைத் தாண்டி தொழிலிலும் ஈடுபட்டு வரும் ஜெனிபர் லோபஸின் ஒரு ஆடையும், உலக மக்களின் தேடலும் தான் கூகுளின் இறைய புதி தொழில்நுட்பத்திற்கான காரணம். 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற கிராமி விருது விழாவிற்கு ஜெனிபர் லோபஸ், வெர்செஸ் நிறுவனத்தின் பச்சைநிற ஜங்கின் பிரிண்ட் ஆடையை அணிந்து வந்திருந்தார்.
அந்த ஆடை அன்றைய காலக்கட்டத்தில் மிகப்பெரியளவில் பேசுபொருளாக பார்க்கப்பட்டது. அடுத்த நாள் காலை கூகுளில் உலகமே, Jennifer Lopez Dress என்று தேட ஆரம்பித்தனர். ஆனால் அந்த சமயத்தில் கூகுள் தேடல் தளம் உரை(Text) வடிவிலான முடிவுகளை மட்டுமே காட்டியது.

மக்கள் ஜெனிபரின் ஆடை குறித்து தேடியபோது, அவர்களுக்கு அந்த ஆடையை பற்றிய செய்திகள் தான் கிடைத்துள்ளதாம். ஆடையின் புகைப்படம் நேரடியாக கிடைக்காமல் போக, கூகுளில் சந்திக்காத மிகப்பெரிய தேடல் இதுதானாம்.
அத்தனை பேர் அந்த உடையின் புகைப்படத்தை இண்டர்நெட்டில் தேடியதால், கூகுளின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி எரிக் ஷ்மிட் இதுகுறித்து பகிர்ந்துள்ளார்.
அதில், மக்கள் அந்த நடிகை அணிந்திருந்த ஆடையை பார்க்க விரும்பினார்கள், ஆனால் எங்களால் அவர்களுக்கு தேவையானதை வழங்கமுடியவில்லை. அந்தத்தேடல் அதுவரை நாங்கள் கண்டிராத மிகப்பெரியளவில் இருந்தது என்று கூறினார்.

நடிகையின் ஆடைக் குறித்த தேடல்தான் கூகுளுக்கு புது பிசினெஸ் ஐடியாவை கொடுத்தது. அப்படி கூகுள் பொறியாளர்கள், படங்களை மட்டும் தேடுவதற்கான ஒரு பிரத்யேக தளத்தை உருவாக்கியதுதான் கூகுள் இமேஜஸ்.
நடிகை ஜெனிபரின் ஆடை காரணமாக 2001 ஜூலை மாதம் கூகுள் இமேஜஸ் அறிமுகம் செய்து, 250 மில்லியன் படங்களை கொண்டிருந்த இந்தத்தளம், இன்று பல பில்லியன் படங்களை கொண்ட ஒரு பிரம்மாண்டமான டிஜிட்டல் போட்டோஸ் நூலகமாக திகழ்ந்து வருகிறது.
கூகுளில் இன்று நீங்கள் ஒரு ஆடையையோ அல்லது மற்ற எவையோ தேடினால், அருகிலேயே அதன்விலை மற்றும் வாங்கும் லிங்க் தோன்றுகிறது.

இதற்காக அந்நிறுவனங்கள் கூகுளுக்கு பெருமளவு விளம்பரக்கட்டணம் செலுத்துகிறார்கள். 2024ல் கூகுளின் மொத்த வருவாய் சுமார் 350 பில்லியன் டாலர், இந்திய மதிப்பில் சுமார் ரூ. 29 லட்சம் கோடியாகும்.
நடிகையின் அடை, கூகுள் நிறுவனத்தின் வரலாற்றில் இவ்வளவு பெரிய தொழில்நுட்ப மாற்றத்திற்கு காரணமாக இருந்ததால், 2019ல் இந்த வரலாற்றுச் சாதனையின் 20வது ஆண்டை கொண்டாடியது. அதிலும் ஜெனிபர் லோபஸ் அதேபோன்ற வடிவமைக்கப்பட்ட ஆடையை அணிந்து மேடையில் தோன்றியிருக்கிறார்.