அதுதான் தெரியவில்லை.. திருமணம் குறித்து மனம் திறந்து பேசிய நடிகர் பிரபாஸ்
தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் பான் இந்தியன் ஸ்டாராக கொண்டாடப்பட்டு வருபவர் பிரபாஸ். இவர் நடிப்பில் அடுத்ததாக ராஜா சாப் படம் ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இயக்குநர் மருதி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பிரபாஸ் உடன் இணைந்து நிதி அகர்வால், மாளவிகா மோகனன், ரிதி குமார் ஆகியோர் நடித்துள்ளனர். 46 வயதாகியும் சிங்கிளாகவே உள்ளார் நடிகர் பிரபாஸ்.

இவரிடம் ரசிகர்கள் முக்கியமாக கேட்பது திருமணம் எப்போது தான். இந்த நிலையில், இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் தொகுப்பாளினி, உங்களை மணக்க விரும்பினால் அந்த பெண் எப்படி இருக்க வேண்டும் என பிரபாஸிடம் கேட்கிறார்.
அதற்கு பிரபாஸ், அது தெரியாமல் தான் நான் இன்னும் திருமணமே செய்துகொள்ளாமல் இருக்கிறேன், தெரிந்தால் திருமணம் செய்துகொள்வேன் என ஜாலியாக கூறினார்.