நடிகை சமந்தாவின் மாமியார் குடும்பத்தை பார்த்துருக்கீங்களா? யார் கண்ணிலும் படாத புகைப்படம்
நடிகை சமந்தா மறுமணம் செய்த ராஜ் நிடிமொரு குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா.
இவர் சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலங்களில் பெரிதாக படவாய்ப்புகள் இல்லாவிட்டாலும் நாட்கள் செல்ல செல்ல டாப் ஹீரோக்களுடன் நடிக்க ஆரம்பித்து விட்டார்.
தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தி என பிறமொழிப்படங்களிலும் நடித்து வருகிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளாக உடல்நல குறைவு காரணமாக சினிமாவுக்கு் ஓய்வு கொடுத்து விட்டு, போட்டோ ஷூட்களில் ஆர்வம் காட்டி வருகிறார்.

இவர் எடுக்கும் புகைப்படங்களை நாட்கள் இடைவேளையில், சமூக வலைத்தளங்களில் பகிர்வது வழக்கம். அதே போன்று பல துறைகளிலும் முதலீடு செய்திருக்கிறார்.
இதற்கிடையில், சமந்தா மற்றும் ராஜ் நிடிமோரு பல ஆண்டுகளாக ஒருவரையொருவர் காதலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகின.
அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்த நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் கோவை ஈஷா யோகா மைய வளாகத்தில் உள்ள லிங்க பைரவி கோயிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களின் திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் நடிகை சமந்தா திருமணம் செய்து கொண்ட ராஜ் நிடிமொருவின் குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படங்களை சமந்தா ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
