Zoom Po.. Zoom Po.. Noooo.... திரிஷாவின் போட்டோவை Zoom செய்து பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை திரிஷா கிருஷ்ணன், தனது வளர்ப்பு நாயுடன் ஸ்லீவ்லெஸ் உடை மற்றும் ஜீன்ஸ் அணிந்து எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தில் திரிஷா அணிந்துள்ள சன்கிளாஸில் நடிகர் விஜய்யின் முகம் பிரதிபலிப்பதாக ரசிகர்கள் கலாய் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
விஜய் மற்றும் திரிஷா இடையே நீண்டகால நட்பு இருந்தாலும், அவர்களுக்கு இடையே நெருக்கமான தொடர்பு உள்ளதாக வதந்திகள் அவ்வப்போது பரவி வருகின்றன.
இந்த புகைப்படம் அந்த வதந்திகளுக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது. திரிஷா, விஜய்யுடன் இணைந்து ‘கில்லி’, ‘லியோ’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இவர்களது திரையுலக நட்பு, ரசிகர்களிடையே எப்போதும் பேசுபொருளாக இருக்கிறது. ஆனால், சமீபகாலமாக திரிஷா வெளியிடும் புகைப்படங்கள், குறிப்பாக விஜய்யுடன் எடுக்கப்பட்டவை, சமூக வலைதளங்களில் விவாதங்களை தூண்டியுள்ளன.
இந்த புகைப்படத்தை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டதை அடுத்து, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இதை கலாய் மீம்களாக மாற்றி பரப்பி வருகின்றனர்.
மறுபுறம், நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்க்கட்சியினர் இந்த வதந்திகளை பயன்படுத்தி விஜய்யை குறிவைத்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
திரிஷாவின் சன்கிளாஸில் விஜய்யின் முகம் தெரிவதாக பரவும் மீம் வீடியோ, இந்த சர்ச்சையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக திரிஷா எந்தவொரு அதிகாரப்பூர்வ பதிலையும் வெளியிடவில்லை.
ஆனால், இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற வதந்திகள் திரிஷா மற்றும் விஜய்யின் பொது இமேஜை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் கருத்து மோதல்கள் நீடிக்கின்றன.
🤣🤭🤣 close poo.. close poo .. pic.twitter.com/aPIqYprpgH
— Gypsy 🎭 (@Gypsy_1809) July 13, 2025