தக் லைஃப் : திரிஷாவை பத்தி வருத்தப்பட வேண்டியது அவர் தான்!! கலாய்த்து தள்ளும் பிரபலம்..
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், கமல் ஹாசன், சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், அபிராமி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் தக் லைஃப் படம் கடந்த ஜூன் 5ஆம் தேதி ரிலீஸானது. படம் வெளியாகி மோசமான விமர்சனத்தை பெற்று வருகிறது.
அதிலும் திரிஷாவின் கதாபாத்திரத்தை அசிங்கமாக சித்தரித்துள்ளதை விமர்சித்தும் வருகிறார். பல பத்திரிக்கையாளர்கள் விமர்சகர்கள் தக் லைஃப் படத்தை விமர்சித்து பேசி வந்தனர்.
அதில் நடிகர் மீசை ராஜேந்திரனும் தன் பங்கிற்கு கலாய்த்துள்ளார். அவர் அளித்த பேட்டியொன்றில், திரிஷாவை யார் வெச்சுக்கணும் என்பதற்காக ஒரு படம் எடுப்பீர்களா? என்று ரசிகர்கள் திட்டி வருகிறார்கள் அது பற்றிய கருத்து என்ன என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு மீசை ராஜேந்திரன் சிரித்தபடி, அதுபற்றி வருத்தப்பட வேண்டியது வேற ஒருத்தரு. யாருன்னு உங்களுக்கே தெரியும், நான் சொல்ல வேண்டியதில்லை என்று ஓபனாக கலாய்த்துள்ளார்.