விட்ருங்க என கெஞ்சினேன்.. ஸ்டூடியோவில் Light Off பண்ணி அசிங்கம்.. ஆடுகளம் இயக்குனர் குறித்து தேவிப்பிரியா பகீர்!

விட்ருங்க என கெஞ்சினேன்.. ஸ்டூடியோவில் Light Off பண்ணி அசிங்கம்.. ஆடுகளம் இயக்குனர் குறித்து தேவிப்பிரியா பகீர்!

பிரபல நடிகையும் டப்பிங் கலைஞருமான தேவிப்பிரியா, சமீபத்திய பேட்டி ஒன்றில் ‘ஆடுகளம்’ படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து பகிர்ந்த தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

பல நடிகைகளுக்கு குரல் கொடுத்து புகழ்பெற்ற தேவிப்பிரியா, ஆடுகளம் படத்தின் டப்பிங் பணிக்காக அழைக்கப்பட்டபோது, ஸ்கிரிப்டில் கெட்ட வார்த்தைகள் இருந்ததைக் கண்டு அதிர்ந்ததாக கூறினார். 

விட்ருங்க என கெஞ்சினேன்.. ஸ்டூடியோவில் Light Off பண்ணி அசிங்கம்.. ஆடுகளம் இயக்குனர் குறித்து தேவிப்பிரியா பகீர்!இயக்குனர் வெற்றிமாறனிடம் இது குறித்து கேட்டபோது, “இதுதான் ஸ்கிரிப்ட், பேசுங்கள்” என பதிலளித்தாராம். கூச்சமாக இருந்த காரணத்தால், முதலில் விட்ருங்க சார் வேணாம் என கெஞ்சியதாகவும், பிறகு விளக்குகளை அணைத்துவிட்டு பேசுகிறேன் என தேவிப்ப்ரியா கோரிக்கை வைத்ததாகவும், அவர் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தார். 

அந்த காலத்தில் OTT தளங்கள் இல்லாததால், திரையரங்குகளில் சென்சார் செய்யப்பட்டு கெட்ட வார்த்தைகள் நீக்கப்படும் என்று தெரிந்தும், அவற்றை பேச வேண்டியிருந்தது தனக்கு கொடுமையான அனுபவமாக இருந்ததாகவும், அதேநேரம் புதுமையான அனுபவமாகவும் இருந்ததாகவும் தேவிப்பிரியா கூறினார். 

வெற்றிமாறன் இதற்கு, “உணர்ச்சிகளை முழுமையாக வெளிப்படுத்தவே.. கெட்ட வார்த்தையுடன் அந்த வசனத்தை கேச சொன்னதாகவும், அப்போது தான் அந்த வசனத்திற்கான வேகம் கிடைக்கும்” என விளக்கமளித்ததாகவும் தெரிவித்தார். 
இந்த பேட்டி சமூக வலைதளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

LATEST News

Trending News