நடிகர் ராஜேஷ் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்
திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ராஜேஷ். அவள் ஒரு தொடர் கதை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தமிழில் இதுவரை 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்திருக்கிறார். மேலும் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் பணியாற்றியுள்ளார்.
வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்துள்ளார் நடிகர் ராஜேஷ்.
இந்த நிலையில், 45 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வரும் நடிகர் ராஜேஷ் உடல் நலக் குறைவு காரணமாக இன்று மே 29ம் தேதி காலமானார். இவர் வயது 75.
மூச்சுத்தினறல் காரணமாக உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கின்றனர். இவருடைய மரணம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
RIP Rajesh annan... pic.twitter.com/ipLEMS0TsT
— John Mahendran (@Johnroshan) May 29, 2025