Thug Life!! ஆடியோ லான்சில் சரிகமப லிட்டில் சாம்ஸ் 4 திவினேஷ், ஸ்ரீமதி..அஞ்சு வண்ண பூவே..
இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் தக் லைஃப்.
இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள தக் லைஃப் படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி உலகளவில் ரீலிஸாகவுள்ளது. இப்படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி சமீபத்தில் பிரமாண்ட முறையில் நடந்து முடிந்தது.
இந்நிகழ்ச்சியில் பல பாடல்களை பிரபல பாடகர்கள் பாடி அசத்தினர். அதில் அஞ்சு வண்ண பூவே என்ற பாடலை பாடகி சாருலதா மணி பாடினர்.
அவர் பாடும் போது, சரிகமப லிட்டில் சாம்ஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் திவினேஷ் மற்றும் ஸ்ரீமதி, அவினேஷ் உள்ளிட்டவர்கள் கோரஸ் பாடி அசத்தினர். டைட்டில் வின்னரானப்பின் திவினேஷ், ஸ்ரீமதி, அவினேஷின் முதல் மேடை இதுவாக இருப்பதை பலரும் பாராட்டி வருகிறார்கள்.