"அதை போட்டா சொர்க்கத்துக்கு பக்கத்துல போகலாம்..." - பேக் ஷேப்பின் ரகசியத்தை உடைத்த கேத்ரின் தெரசா.!
அட்டகத்தி இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் மெட்ராஸ். மெட்ராஸ் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் படத்தின் நாயகி கேத்தரின் தெரேசா.
1989 ஆம் ஆண்டு துபாயில் பிறந்தவர் பிறந்து வளர்ந்த அனைத்தையும் பெங்களூரில் தான். 2010 ல் கன்னடத்தில் வெளியான ஒரு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் கேத்ரின் தெரசா அதன் பின்னர் மலையாளம், தெலுங்கு, தமிழ் என்று பல மொழி படங்களில் நடித்துள்ளார்.
மெட்ராஸ் படத்தை தொடர்ந்து கணிதன், கலகலப்பு 2, கதகளி போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கிலும் பிசியாக நடித்து வந்தார் ஆனால் இவர் சமீபத்தில் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் தோல்வியை தழுவின. இவர் கடைசியாக நடித்த திரைப்படம் கலகலப்பு-2 ரசிகர்களிடம் நல்ல வெற்றியை பெற்றது.
இந்த படத்தில் அனைத்து பாடலும் நல்ல ரீச் ஆகி ஹிட் ஆனது அதுவும் ஒரு குச்சி ஒரு குல்ஃபி பாடல் செம்ம ஹிட் அடித்தது. இந்த பாடலில் வளைந்து நெழிந்து செம்ம ஆட்டம் போட்டிருப்பார் அம்மணி.
இந்த பாடலின் வெற்றி மூலம் கேதரின் தெரசாவுக்கு பட வாய்ப்புகள் வரத்தொடங்கின. சமீபத்தில், World Famous Lover என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார்.
மலை போல நம்பியிருந்தது இந்த படமும் தோல்வியை தழுவியதுடன் படத்தில் ஏற்பட்ட நஷ்டத்துக்கு ஹீரோ விஜய தேவரகொண்டா தான் காரணம் என்றும் அவர் தன்னிடமிருந்து எழுதி வாங்கிய வீட்டை திருப்பி தர வேண்டும் என்று தயாரிப்பாளர் போர்க்கொடி உயர்த்தினார்.
இதற்கிடையில் ரூ. 1 கோடி சம்பளம் தருவதாக தேடி வந்த சீனியர் ஹீரோ படத்தையும் அவசரப் பட்டு ஏற்க மறுத்துவிட்டு தற்போது கையை பிசைந்துகொண்டிருக்கிறார்.
படப்பிடிப்பு பணிகள் எதுவும் இல்லாத நிலையில் உடல் வெயிட் போட்டுவிடக் கூடாது என்பதால் தனது கவனத்தை ஜிம் பக்கம் திருப்பியிருக்கிறார். தினமும் கடுமையான உடற்பயிற்சி செய்து தற்போது 5 கிலோ எடை குறைத்து ஒல்லிபிச் சான் ஆகியிருக்கிறார்.
பாடல்களுக்கு மட்டும் கவர்ச்சி காட்டி நடித்துவந்த இவர் தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.