மார்பகம் பெருசா இருந்தா.. இதுவும் பெருசா இருக்கும்.. பிக்பாஸ் RJ ஆனந்தி பேச்சு.. என்ன இப்படி சொல்லிட்டாங்க..?

மார்பகம் பெருசா இருந்தா.. இதுவும் பெருசா இருக்கும்.. பிக்பாஸ் RJ ஆனந்தி பேச்சு.. என்ன இப்படி சொல்லிட்டாங்க..?

RJ ஆனந்தி வானொலி தொகுப்பாளினாக இருந்த இவர் யூடியூப் தொகுப்பாளினாகவும் அறியப்படுகிறார். சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார்.

மெட்ராஸ் சென்ட்ரல் என்ற யூட்யூப் சேனலில் பழைய படங்கள், கவனிக்கப்படாத படங்களை எடுத்து விமர்சனம் செய்யும் வேடிக்கையான «ரீல் அந்து போச்சு» என்ற இவரது வீடியோக்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

இணைய பக்கங்களில் ஆக்டிவாக வளம் வரும் இவர் அவ்வப்போது ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார். அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் பேசியிருக்க கூடிய விஷயம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது.

இதனை கேட்டு ரசிகர்கள் என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாங்க என்று கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். அவர் கூறியதாவது, ஒரு பெண்ணாக நான் உடம்பை பார்த்து எப்போதுமே Confident-ஆக இருந்தது இல்லை.

பொதுவாகவே பெரிய மார்பகங்கள் இருக்கக்கூடிய பெண்களை தான் ஆண்கள் அழகானவர்களாக கவர்ச்சியானவர்களாக பார்க்கிறார்கள். நான் அனைத்து ஆண்களையும் சொல்லவில்லை.. ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருக்கும் ஆண்கள் பெரிய மார்பகம் இருக்கும் பெண்களை ஆஹா ஓஹோ என புகழ்கிறார்கள்.

அதுதான் அழகு என்று கூறுகிறார்கள். ஆனால், உண்மை என்னவென்றால் அப்படி பெரிய மார்பகம் இருக்கும் பெண்கள் அதனால் கஷ்டப்படுகிறார்கள் என்பது தான் நிதர்சனம்.

இதை வேறு மறைக்க வேண்டும்.. ஷால் போட வேண்டும்.. ஆடை விலகினால் தெரியும்.. குனிந்தால் தெரியும்.. இப்படி அவர்களுக்கு இதனால் நிறைய சங்கடங்கள் இருக்கிறது.

எந்த அளவுக்கு மார்பகம் பெரிதாக இருக்கிறதோ.. அதே அளவுக்கு சங்கடமும் பெரிதாக இருக்கிறது… மார்பகத்தை ஒரு கவர்ச்சி பொருளாக படங்களில் காட்ட வேண்டுமா..? என்பது இங்கே கேள்விக்குறியாக இருக்கிறது என பேசி இருக்கிறார் நடிகை ஆர் ஜே ஆனந்தி

LATEST News

Trending News