இயக்குனர் ஜனநாதன் உடலை பார்த்து கண்கலங்கி அழுத இயக்குனர் பா. ரஞ்ஜீத் - உருக்கமான வார்த்தைகள்
உடல்நல குறைவால் மருத்துவமனையில் எஸ்.பி. ஜனநாதன் அனுமதிக்கப்பட்டிருந்தார். தலையில் இரத்த கசிவு ஏற்பட்டுள்ளது என மருத்துவர்கள் தெரிவித்திருந்தார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் உயிரிழந்துள்ளார் எனும் துக்க செய்து வெளியானது.
இவரின் மறைவிற்கு பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அதில் ஒருவராக முன்னணி இயக்குனர் பா. ரஞ்ஜீத், தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார்.
இதில் பேசிய பா. ரஞ்ஜீத் " எனக்கு திரையுலகில் துக்கப்புள்ளியாக இருந்த இயக்குனர்களில் ஒருவர் ஜனநாதன். அவரின் மறைவை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது " என கண்கலங்கி பேசினார்.
மேலும் மறைந்த இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் அவர்களின் இறுதி சடங்கு நாளை காலை 10மணிக்கு நடக்கிறது. சென்னை மயிலாப்பூர் சிட்டி செண்டர் பின்னால் உள்ள சுடுகாட்டில் உடல் தகனம் என தகவல் கிடைத்துள்ளது.